அட்டனில் மாணிக்ககற்கள் தோண்டிய ஆறு பேர் கைது

0
153

அட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் அட்டன்ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில்  அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 06 (26.04.2023) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.என்.தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், அட்டன் ஸ்டெதன் தோட்டத்திற்கு அருகாமையில் அட்டன்ஓயா அண்மித்த காட்டுப்பகுதியில் மாணிக்கக்கற்களை தோண்டிய சந்தேக நபர்களை சுற்றிவளைத்ததுடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here