அட்டன் சமூக நல நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறுவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கலாசார நிகழ்வும் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் கலந்து கொண்டார்.
அட்டன் சமூக நல நிறுவனத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை பிரேம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.