அட்டன் நகரில் பாரிய போராட்டம்

0
156

அட்டன் நகரில் இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக பாரிய  ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேற்படி போராட்டகாரர்கள் பேரணியாக அட்டன் நகரத்திலிருந்து மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு அணைவரும் ஒன்றுக்கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர். அதன் பின் மீண்டும் அட்டன் நகரத்திற்குள் பேரணியாக சென்றனர்.

இன்றைய பணிபுறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது  அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here