அட்டன் – நல்லத்தண்ணி , அட்டன் – மஸ்கெலியா , மறே, சாஞ்சிமலை தனியார் பஸ் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் சேவையில் ஈடுபடும், தனியார் பஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக (14,15) சேவை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் , நேற்று 16ஆம் திகதி அட்டன் டிப்போ, அட்டன் -மஸ்கெலியா தனியார் பஸ் உரிமையாளர்கள் மத்தியமாகாண போக்குவரத்து பிரிவின் நுவரெலியா மாவட்ட அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இன்று பஸ்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீபாத பருவ கால பகுதியில் குறித்த வீதியில் குறிப்பாக அட்டன் நல்லத்தண்ணி வரை சேவையில் விஷேட சேவையில் ஈடுபடுத்தப்படும் இ.போ.ச பஸ் குறித்த வீதிகளில் சேவையில் ஈடுபடும் போது இடைநடுவில் பயணிகளை ஏற்றாமல் செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு பயணிகளை ஏற்றிச் செல்லும் போது குறித்த வீதியில் நிரந்தரமாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.