ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையிலே இன்று காலை 08 மணியளவில் தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்தின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கும் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அட்டன் பொலிஸாரினால் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையின் உடல் பகுதியில் காயங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹட்டன் பொலிசார் மற்றும் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் உடன் அந்த பகுதிக்கு சென்று சிறுத்தை உடலை பிரேத பரிசோதனைக்காக உடவலவை மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.