அணுவாயுத தயாரிப்பில் ரஷ்யா சிறந்த முன்னேற்றம்!

0
12

உலகின் மிக நவீன அணு ஆயுதங்களை ரஷ்யா கொண்டுள்ளது, இது நாட்டின் இறையாண்மையையும் உலகளாவிய அதிகார சமநிலையையும் உறுதி செய்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தேசிய ஆயுதத் திட்டம் குறித்த அரசாங்கக் கூட்டத்தில் நேற்று (11) உரையாற்றிய அவர், நாட்டின் அணு முக்கோணத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேவேளை ரஷ்ய மூலோபாய அணுசக்தி படைகளில் அதிநவீன ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் பங்கு 95% ஐ எட்டியுள்ளதோடு அணுவாயுத தயாரிப்பில் ரஷ்யா நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் கூறினார். அத்தோடு உலகின் அனைத்து அணுசக்தி சக்திகளிலும் இதுவே மிக உயர்ந்த நிலை” என்றும் புட்டின் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யா தனது அணு ஆயுதக் கிடங்கை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. சர்மட் ஐ.சி.பி.எம் செப்டம்பர் 2023 இல் போர் கடமைக்காக அங்கீகரிக்கப்பட்டது. ரஷ்யாவின் மிகவும் திறமையான அணு ஆயுதங்களில் ஒன்றான சர்மட் 11,000 மைல்கள் (சுமார் 18,000 கிமீ) மதிப்பிடப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புட்டினின் கூற்றுப்படி, ரஷ்யா அணு ஆயுதங்களில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது, உக்ரைன் மோதலில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான மிகவும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளை மையமாகக் கொண்ட ஒரு புதிய நீண்டகால ஆயுதத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here