அதானிக்கு செலவை செலுத்தும் அனுர அரசாங்கம்!

0
70

இலங்கையில் கைவிடப்பட்ட காற்றாலை திட்டங்களுக்காக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு ஆரம்ப செலவுகளை அரசாங்கம் மீள செலுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளையே மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, 350 மெகாவோட் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களிலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அண்மையில் விலகியிருந்தது.

புதிய அரசாங்கம் மின்சாரக் கொள்வனவு கட்டணத்தை மாற்ற முனைந்ததைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

இந்தநிலையில், அதானி நிறுவனத்தினர், கடந்த மே மாதத்தில், இலங்கை அரசாங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

அதில், தமது நிறுவன அதிகாரிகள், இலங்கையின் நிலையான எரிசக்தி அதிகாரசபையுடன் இணைந்து மேற்கொண்ட பணிகளுக்காக, 3 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளிட்ட ஆரம்ப செலவுகளை மீள செலுத்துமாறு கோரியிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த நிறுவனம் தங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகையை இன்னும் இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here