அதிகரிக்கும் அஸ்வெசும கொடுப்பனவு – ஜனாதிபதியின் அறிவிப்பு

0
7

2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பத்தாவது நாமாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் தனது கன்னி அமர்விலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கைப் பிரடனத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

அத்துடன், 5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது

திறமையான பொதுச்சேவை, மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்படும் பொதுச் சேவை இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன், அத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here