நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அதேசமயத்தில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 49,759 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 24,837பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதுமுள்ள 61 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு எச்சரிக்கை வலயங்காளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.