அதிகரிக்கும் நோய் தாக்கம்: வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

0
68

கடந்த 10 வருடங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் உதித புளுகஹபிட்டிய (Dr Uditha Bulugahapitiya) தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நீரிழிவு நோயில் இருந்து விடுபட, ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை குறைத்து காய்கறிகள், இறைச்சியுடன் கூடிய உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு கழுத்துப் பகுதி கருப்பாக மாறியிருந்தால், முகத்தில் முடி வளர்வது போன்ற நிலைமைகள் இருந்தால், அதுபோன்ற சமயங்களில் நீரிழிவு நோய் உள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்றும் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, நீரிழிவு நோயின் அறிகுறிகள் மற்றும் நோயிலிருந்து விடுபட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு விசேட வைத்தியர் உதித புளுகஹபிட்டிய எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here