இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் 1,178 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 161,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 126,995 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றினால் ஒரே நாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவான முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பதுளை பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவரும் அடங்குவதுடன், கந்தபொல பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆணும், நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆணும் உயிரிழந்தார்.
மேலும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணும், நுவரெலியாவைச் சேர்ந்த 80 வயதான ஆணும் உயிரிழந்தனர்.
மற்றும் கந்தபொல பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண் உயிரிழந்துள்ளதுடன், பேராதெனியவைச் சேர்ந்த 78 வயதான ஆணும், பேராதெனிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெண் அடங்களாக 46 கொவிட் மரணங்கள் பதிவாகின.
இவ்வாறு மரணித்தவர்களில் 30 ஆண்களும், 16 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.