அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஆறு மாதங்களுக்குள் ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை இது குறித்து சோதனைகள் நடத்தப்பட்டன, இந்தக் காலகட்டத்தில் 306 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான சோதனைகள் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதேபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரசபை மேலும் கூறியது.
அனுமதிக்கப்பட்ட விலையை விட 20 ரூபா அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்தமைக்காக கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு பேக்கரி வலையமைப்புக்கு 600,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.