சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு டீசல் தொகையொன்றை விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பௌசர் சாரதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.6,600 லீற்றர் டீசலுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
5சந்தேகநபர்கள் ஒரு லீற்றர் டீசலை 900 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பௌசர் சாரதி, உதவியாளர் உட்பட நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.