இரண்டு தசாப்தக்காலமாக நிலவிய அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு பிரதமர் தீர்வை வழங்கியுள்ளமை அதிபர் ஆசிரியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறத.எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாது முன்னெடுக்கப்பட்ட தொடர் போராடடத்திற்கு கிடைக்கப்பெற்ற வெற்றியே இதுவென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க பிரதமர் தீர்மானித்துள்ளதுடன், வரலாற்றில் முதல் முறையாக அதிபர், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு 7.5 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறுமாதகாலமாக எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாது பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துவந்தன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து ஆசிரிய தொழிற்சங்கங்களும் கைகோர்த்துச் செயல்பட்டதன் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது.
இந்த வெற்றி எம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், ஆசிரியர்கள் என்றும் தன் சேவையை அர்ப்பணிப்ப்புடன் செய்ய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.