பிரேசில் அதிபர் மாளிகையில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஆனால் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதாக கூறி முன்னாள் அதிபர் போல்சானரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அதிபர் மளிகை மற்றும் உச்ச நீதிமன்றம் முன் திரண்ட போல்சானரோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.மாளிகையின் கண்ணாடிகளை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் லூலா சில்வாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அடித்து நொறுக்கினர்.
நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.சுமார் 3000 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. வன்முறை சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் தனது வெளியிட்டுள்ள பதிவில்,’பிரேசிலில் அமைதியான முறையில் நடந்த அதிகார பரிமாற்றம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.
எங்களின் முழு ஆதரவு பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு உள்ளது. பிரேசில் மக்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. லூலாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.