நான்கு தொடர் தோல்விகளுக்கு பின் ஐபிஎல் போட்டியில் தனது முதலாவது வெற்றியை சென்னை சுப்பர் கிங்ஸ் பதிவிட்டது.
ஊத்தப்பா மற்றும் சிவம் ஹுடேயின் அதிரடி ஆட்டத்தினால் 213 ரன்களை குவித்தது சென்னை .ஹுடே 94 ரன்களை எடுத்தார்.ஊத்தப்பா 84 ரன்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் பெங்களூர் 193 ரன்களை மாத்திரமே பெற்றது.இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடிய போதும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. சென்னை அணியின் பந்து வீச்சில் இலங்கை வீரர் தீக்சன 4 விக்கெட்டுகளை எடுத்தார்.