நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி” பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
“நா ரெடி” பாடலின் காணொளியில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி” பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சர்ச்சைகள் எழுந்தது.
மேலும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழும்பியது.
இந்நிலையில், “நா ரெடி” பாடலின் காணொளியில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என அறிவிப்பு இணைக்கப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.