அதிவேக பயணிகளுக்கான அறிவுறுத்தல்!

0
4

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக இன்று முதல் சிறப்பு ஆய்வு நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  விளக்கமளித்த தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால,

“செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக வீதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் உள்ளது.” என தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here