ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் முதல் சிங்கிள் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை எட்டிய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற பாடல் நேற்று வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை பெற்ற பாடல் என்ற பெருமையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் ‘புஷ்பா’, ஜவான்’ பட பாடல்களின் சாதனையை ‘பெட்டி’ பாடல் உடைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த சாதனையை தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படப் பாடல் பெற்றிருந்தது.
இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய சாதனையை தானே உடைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாடல் தற்போது நூறு மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது. இந்த இரண்டு பாடல்களுமே ரீல்ஸ் மூலம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன.
HinduTmail




