எடை குறைப்பு நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொண்ட பெண்கள் கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் அவர்களின் பசியும் கட்டுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நார்ச்சத்து அதிகமாக உள்ள அத்திப் பழம் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.
மலச்சிக்கல் காய்ந்த அல்லது புதிய அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதை உண்ணுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் சீராகிறது. ஒவ்வொரு முன்று கிராம் பழத்திலும் 5 கிராம் நார்சத்து இருப்பது இதன் சிறப்பம்சம்.
கொழுப்புச்சத்தை குறைத்தல் நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.
கரோனரி இதய நோய்கள் அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை இயற்கையாகவே இதயத்திற்கு வலு சேர்த்து, இதய நோய்களை தவிர்க்க உதவும் சத்துக்களாகும்.
பெருங்குடல் புற்றுநோய் அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி புற்றுநோயை, குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்கிறது.
மாதவிடாய் நிறுத்த மார்பக புற்றுநோய் அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோயை தடுக்கிறது. ஆய்வு ஒன்றில் 51,823 மாதவிடாய் நிறுத்தப் பெண்களை நார்ச்சத்து மிக்க பழங்களை உட்கொள்ள வைத்து, 8.3 ஆண்டுகள் கண்காணித்ததில் மார்பக புற்றுநோய் சதவீதம் 34 சதவீதம் குறைந்தது. அதே நேரத்தில் ஹார்மோன் சிகிச்சைகள் பெறாத, நார்ச்சத்து அதிகம் உண்ணும் பெண்களுக்கு 50% வரை மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு குறைந்தது. அதுமட்டுமின்றி ஆப்பிள், பேரிச்சை, பேரிக்காய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
மூலநோய் ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி, மூலநோயில் இருந்து காக்கிறது.
சிறுநீரகம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களோ, சிறுநீரகக் கற்கள் பிரச்சனையோ கொண்டவர்கள் அத்திப்பழத்தை தவிர்ப்பது நல்லது.