அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

0
64

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டி.லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார்.

அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் நாடு வகை அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய கால தீர்வாக இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டு அமைச்சு பத்திரத்தை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்போம்.

அரிசி இறக்குமதி செய்வதால் தேசிய விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்பட போவதில்லை. இடைத்தரகர்களின் முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு தடையின்றி வழங்கப்படும்.அரசியலில் தோல்வியடைந்துள்ள தரப்பினர் வெறும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொள்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here