அரசாங்கம தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அத்தியாவசிய கடைகள் பூட்டி மதுபானசாலைகளை திறந்திருக்குமையானது பொது மக்களை அவமானப்படுத்தும் விடயமென பொது மக்கள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொரேனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக அத்தியவசிய கடைகள் பூட்டப்பட்டுள்ளன. பால் மா சீனி உள்ளிட்ட பல பொருட்களின் தட்டுப்பாடு இன்றும் தீரவில்லை இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சத்தோச நிலையங்களும் ஒரு சில கடைகளும் மாத்திரம் தான் திறக்கப்பட்டுள்ளன. இதனை கொள்வனவு செய்வதற்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பார்கள் திறந்ததன் காரணமாக சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பார்களில் மது பானங்களை பெறுவதற்காக நேற்று ஒன்று கூடினர் இதனால் தொற்று பரவாதா? அத்தியவசிய பொருட்களை பெறுவற்கு நகரங்களுக்கு வந்தால் பொலிஸார் மக்களை துறத்துகின்றனர் ஆனால் மதுசானசாலைகளில் கூடியிருந்த மக்களை வேடிக்கை பார்க்கின்றனர் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்.ராஜாராம் கருத்து தெரிவிக்கையில் இன்று பொது மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பினை தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அத்தியசிய பொருட்களை கொள்வனவும் செய்ய முடியாது துன்பப்பட்டு துயரப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் அரசாங்கம் பார்களை மாத்திரம் திறந்து அத்தியவசிய கடைகளை மூடியமையானது அரசாங்கத்தின் வன்கோரத்து அரசியலை காட்டுகின்றது.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் இது மது பிரியர்களுக்கு சோகமான விருந்து குடும்ப ஸ்திரியர்களுக்கு நஞ்சு மருந்தாக திட்டமாகவே நாங்கள் இதனை பார்க்கிறோம்.
21ம் திகதி நாடு திறக்கப்படவுள்ளது எதிர்ப்பார்ப்போடு அப்போது பொது மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். என்று இருந்த இந்த சந்தர்ப்பத்தில் அத்தியவசிய கடைகளை பூட்டி மது பான சாலைகளை திறந்திருப்பது மிகவும் வேதனைக்குரியதும் நகைப்புக்குரியதும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.