அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

0
152

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பயனை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என இறக்குமதியாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நேரத்தில், இறக்குமதியாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதேவேளை வியாபாரிகளும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக இறக்குமதியாளர்கள் பொருட்களுக்கான விலையை குறைத்து வழங்குகின்றனர்.

விலை ஏறும் போதும், விலை குறையும் போதும் இந்த நிலையை சந்திக்க வேண்டியுள்ளது. என்றபோதும் இதன் நன்மையை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

கடந்த வாரம், ஒரு கிலோகிலோகிராம் சர்க்கரை, 25 – 30 ரூபா வரையில் குறைந்துள்ளது. வெங்காயம், பருப்பு, கிழங்கு என்பவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.

எனவே பண்டிகைக் காலத்தில் மேலும் விலைகள் குறைந்து நுகர்வோர் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாயப்பு கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here