அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் பசுமாட்டை கடத்திய 03 பேர் டயகம பொலிஸாரினால் கைது.

0
195

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காக பசுமாட்டை கடத்திய மூவர் இன்று (17) திகதி காலை டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது
பொலிஸாருக்கும் கிடைத்து இரகிய தகவலினை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பசு மாடு  ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் சந்திரகாமம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் கடத்தல் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்;;ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
இதேவேளை, டயகம பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், 325 லீற்றர் கோடாவும், கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here