அந்நியச் செலாவணி திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பின் போது, விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படவுள்ளது.
பாாளுமன்ற தொடர்பாடல் துறையின் பதில் பணிப்பாளர் எம். ஜெயலத் பெரேராவின் கூற்றுப்படி, அந்நியச் செலாவணி திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பின் போது விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படும்.
இந்த செயல்முறை காலை 11:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மதியம் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணையின் அடிப்படையில், தேசிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் பாராளுமன்றம் ஈடுபடும்.