தர்புரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாரின் வீதிச் சோதனையின் மூலம் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம், வைத்தியரின் சிபாரிசு, பிரதேச சபையின் சிபாரிசு, சுகாதார பரிசோதகரின் சிபாரிசு மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்காக செல்வதற்கு வாகனத்தில் கால்நடைகளுக்கானஎநீர் மற்றும் உணவு காற்றோட்ட வசதி என்பதை ஏற்படுத்திக் கொடுக்காமை போன்ற குற்றத்தின் அடிப்படையில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்நடைகள் மற்றும் வாகனம் என்பனபொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை இன்று(07) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.