மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சுகாதார சான்றிதழ்களையும் பெறாது ஒரு பசுவினையும் கன்றினையும் கொண்டு சென்ற இரண்டு நபர்களை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை இரணடு மணியளவில் இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா மொக்கா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு சென்றிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறியினையும் பசு மற்றும் கன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனார்.
கைது செய்யப்பட்டுவர்கள் பொலிஸ் விசாரணையின் நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்