சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் நடிக்கும் படத்துக்கு ‘அன்கில்_123’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் உருவாகும் இப்படத்துக்கு ‘அன்கில்_123’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் அனுராக் கஷ்யாப்பின் லுக் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இப்படம் சைக்கோ கில்லர் கதை போன்று தெரிகிறது.
’அன்கில்_123’ படத்தின் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த், இசையமைப்பாளராக ஜெரால்ட், எடிட்டராக நேஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதில் அனுராக் கஷ்யாப் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்து வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘டெடி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பட்டி’ படத்தினை இறுதியாக இயக்கி இருந்தார் சாம் ஆண்டன். தமிழில் 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘ட்ரிக்கர்’ படத்தினை இறுதியாக இயக்கி இருந்தார். தற்போது ‘அன்கில்_123’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார்.
hindutamil




