அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

0
137

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

பூரணமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க உரிமை உண்டு.

அத்தகைய விசாரணையின் போது அந்த அதிகாரி முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால், அது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை இருந்தாலும், இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here