இன்று எமது நாட்டில் பல்வேறு இடங்களில் முறையான சேவைகள் தேவைகள் நிறைவேற்றப் படுவதில்லை இருப்பவருக்கு ஒரு மாதிரியும் இல்லாதவருக்கு ஒரு மாதிரியும் தான் சேவை தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன.என கொழும்பு மாவட்டட தேசிய மக்கள் சகத்தியின் அமைப்பாளர் ஹேமந்த தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவத்திiனை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று 06 ம் திகதி மாலை ஹட்டனில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து சாதாரணமாக வரி செலுத்தும் அனைத்து மக்களும் துன்பங்களை தான் அனுபவித்து வருகின்றனர்; அவர்களின் கல்வி தேவைகள்,சுகாதார தேவைகள்,சட்டம் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றப்படும் போது அது பக்கச்சார்பாகவே நடைபெறுகின்றன.இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் சமனாகவே இருக்க வேண்டும் அவர்களும் மனிதர்கள் என்ற மனப்பான்மை எல்லோர் மத்தியிலும் ஏற்பட வேண்டும் எனவே எமது நாட்டில்; சட்டத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
ஆனால் மக்களின் வரி பணத்தில் வாழும் ஒரு சிறிய குழுவினர் மாத்திரம் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வாழுகின்றனர் கோடிக்கணக்கான பணத்தினை அவர்களின் சொந்த விருப்புக்களுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த அரசியல் கலாசாரத்தினை மாற்ற வேண்டி பொறுப்பும் தேவையும் அனைவரிடமும் காணப்படுகின்றன.எனவே நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பிரதிநிதித்துவத்தினையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மையினையும் பெற்றால் தான் இந்த நாட்டில் சாதாரண மக்களும் ஒரு சுபீட்சமான வாழ்க்கையினை வாழ முடியும் என்பதனை ஜனாதிபதி அனுரகுமார் திசாநாயக்க தற்போது எடுத்து நடவடிக்கைகளில் நீங்கள் காணலாம்.இன்று ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள தோழர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் மிகவும் எளிமையானவர் இந்த பதவியேற்புப வைபவங்களுக்கு கோடிகணக்கில் செலவிடப்பட்டது.
ஆனால் அவர் சுமார் கோடிக்கணக்கான பணத்தினை மிச்சப்படுத்தினார்.அது இன்று உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அப்படியென்றால் கடந்த காலங்களில் செலவிடப்பட்டது யாருடைய பணம் மக்கள் பணத்தினை செலவு செய்து தான் எம்மையும் எமது பிள்ளைகளையும் இந்த நிலைக்கு தள்ளிவிட்டு அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். எமது பிள்ளைகள் வாழ வழியின்றி பெற்றோர்களை விட்டு பிரிந்து வெளிநாடுகளுக்கும் புற நகரங்களுக்கும் சென்று துன்;பப்படுகிறார்கள்;.இந்த நிலை மாற வேண்டாமா?எமது பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? சிந்தித்து பாருங்கள்.
பலர் இன்று எம் மீது நம்பிக்கை அற்ற நிலையில் இருப்பதாகவும் புரிந்து கொண்ட தமிழ் முஸ்லிம் தோழர்கள் அனுரகுமார அவர்களின் கொள்கையினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்
ஆகவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாது நிலையான நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கும் மக்கள் ஆட்சியொன்று நடைபெறுவதற்கு கைகோர்க்க வேண்டும் என அவர் இதன் போது கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் செல்வி,மற்றும் வைத்தியர்கள் வர்த்தகர்கள் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்