இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் இடத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்துள்ளார்.
7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.
அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தில், இப் போராட்டம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக தீவிரமடைந்தது.
போராட்டக்காரர்களில் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் “கொரானா காலம் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை மதிக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தியதுடன், தற்போதை அரசாங்கம் அவர்களை கொண்டு தேர்தல் காலத்தில் நலன்களை அடைந்துகொண்டமையால் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதேபோல், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஆளும் கட்சி எம்.பிக்களும், அமைச்சர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிர்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து அவர்களி தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டமைக்கான காணொளிகளும் உள்ளன என்று கூறினார்.




