அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு!

0
4

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதிஅமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here