கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரியான எரிக் மேயரை, இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க செனட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ பரிந்துரையை சமர்ப்பித்துள்ளார்.
வெளியுறவு சேவையின் சிரேஷ்ட உறுப்பினரான மேயர், தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
இதனூடாக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பரந்த பிராந்தியத்தில் பணியகத்தின் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிடுதல் மற்றும் அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைத்தல் ஆகிய கடமைகளை மேற்கொண்டு வருகிறார்.