அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல்தொழில்நுட்பப் படிப்பு படித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்டில் நகர சாலையை கடக்கும் போது, சைரன் ஒலியுடன் அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியது. இதில் ஜானவி கன்டுலா உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு சியாட்டில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. போலீஸ் வாகனம் சைரன் ஒலி மற்றும் அவசரகால விளக்குகளை எரியவிட்டுதான் சென்றது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.