அமெரிக்காவில் 12 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 99 பேரை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு

0
180

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டடம் சரியும் போது அதில் எத்தனைப் பேர் இருந்தனர் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

எனினும் இதுவரை 102 பேர் மீட்கப்பட்டுள்ளபோதிலும் 99 பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கட்டட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here