அமெரிக்காவில் 90 ஆண்டுகளில் காணாத அளவுக்கு கனமழை…

0
148

அமெரிக்காவின் நியூயார்க்,பென்சிலிவேனியா உள்ளிட்ட மாகாணங்களில் ஐடா புயல் பாதிப்பால் 42 பேர் உயிரிழந்தனர். நியூயார்க் மற்றும் நியு ஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி ,நியூ ஜெர்ஸி, நியுவார்க் உள்ளிட்ட பகுதிகளில் 90 ஆண்டுகளில் காணாத அளவுக்கு பேய்மழை கொட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 3 இன்ச் அளவுக்கு மழை பெய்து வருவதாகவும், நியுவார்க்கில் இதுவரை இல்லாத அளவுக்கு 8 புள்ளி 41 இன்ச் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ,கனமழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கிய நிலையில் தொடர் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும், வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மீட்டு வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here