அமெரிக்கா எங்கள் எதிரி – எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடைக்கு ரஷ்யா பதிலடி!

0
2

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது  அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.  ரஷ்யாவிற்கு எதிராகத் தடைகளை ட்ரம்ப் அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின்  துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதலுக்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டும்.

அமெரிக்கா எங்கள் எதிரி. சமாதானத்தை உருவாக்குபவர் ட்ரம்ப். இப்போது ரஷ்யாவுடனான போர்ப் பாதையில் முழுமையாக இறங்கிவிட்டார்.

அமெரிக்கா ஏமாற்றப்பட்ட ஐரோப்பாவுடன் தன்னை கூட்டாளியாக இணைத்துக் கொண்டுள்ளது. உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்யாவை கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் எதிர்மறையானவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here