அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தின் கவுண்டி பகுதியில் உள்ள சட்ட அமுலாக்க திணைக்களத்தின் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் குறித்த திணைக்களத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வெடிப்பு சம்பவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர் எனவும் மேலும் வெடிப்பில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் முழுமையான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.