அமைதியாக யார் வேண்டுமானாலும் போராட்டத்தை நடத்தலாம் – கலவரம், வன்முறைகளில் ஈடுபடாதீர்கள்

0
196

சில ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தீ வைப்பு சம்பவங்கள், அத்துமீறி நுழைதல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலர் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் யார் வேண்டுமானாலும் போராட்டத்தை நடத்தலாம் எனவும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கலவரம் அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here