அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நான்கு பகுதிகள் இன்று (25) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

0
201

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நான்கு பகுதிகள் இன்று (25) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கினிகத்தேனை பகுதியில் 317சீ – மொரேஹேன்கம, 316ஈ – மில்லகாமுல்ல, அட்டன் பகுதியில் 319சீ – வெளிஓயா மற்றும் நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் 315டீ – விதுலிபுர மேற்கு ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here