அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாத போன 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் 1651 பேருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதற்கமைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபார்ம் முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ் 851 தடுப்பூசிகள் இன்று (21) திகதி ஹட்டன் டி கே.டப்ளியு கலாசார மண்டபத்திலும், வட்டவளை சிங்கள வித்தியாலயத்தில் 800 பேருக்கும் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டன. இதில் பிரதானமான வேலைத்திட்டமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் காணப்படுகின்றன.
குறித்த வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 13 பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளிலும் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் கடந்த காலங்களில் 60 மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் தற்போது நிறைபெற்றுள்ள நிலையில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் தற்போது தொடர்ந்து வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன.
இதே வேளை சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாரத்தில் அம்பகமுவ பகுதியிலும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்