நிலவும் காலநிலை காரணமாக அம்பகமுவ பிரதேச செயலகத்தில் சேதமடைந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.சீரற்ற காலநிலை காரணமாக அம்பகமுவ பிரதேச செயலகத்தில் அழிவடைந்த இடங்களை பார்வையிடும் கண்காணிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றுவருகின்றன.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட அவர்களின் வழிகாட்டலின் பேரில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன இடர் முகாமைத்து நுவரெலியா பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் ஆகியோரின் தலைமையில் இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றது.
மோசமான காலநிலை காரணமாக ஹட்டன் – நல்லதண்ணி வீதியில் சேதமடைந்த இடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டதுடன், அந்த இடங்களை நிலையான மீளமைப்பது தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை ஆகிய பிரதேச செயலகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். இதன் காரணமாக 641 குடும்பங்களைச் சேர்ந்த 2391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டி சந்ரு