நாடளவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்நிலை மலையகப்பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2606 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவுட்குட்பட்ட பகுதியில் முதலாவது தடவை தடுப்பூசிப்பெற்றுக் கொண்டோருக்கான இரண்டாம் டோஸ் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் இன்று ( 12.07.2020) முன்னெடுக்கப்பட்டன.
இதன் படி செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் செனன் கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த 264 பேருக்கும் அட்டன் வடக்கு கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த 693 பேருக்கு சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியிலும் அட்டன் தெற்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகளைச்சேர்ந்த 807 பேருக்கு டி.கே.டபிள்யு கலாச்சார நிலையத்திலும் டிக்கோயா கிராம சேவகர் பிரிவினைச்சேர்ந்த 358 பேருக்கு ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலயத்திலும் அட்டன் கிழக்கு கிராம சேவகர் பிரிவினைச்சேர்ந்த 484 பேருக்கு அட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கபட்டிருந்ததாக பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.காமதேவன் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைக்கு பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், குடும்பல உத்தியோகஸத்தர்கள் பாதுகாப்பு பிரிவினர் உட்பட பலரும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்திருந்தனர். இன்றைய தினம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக பெரும் பாலான சிரேஸ்ட்ட பிரஜைகள் வருகை தநத்திருந்தமை காணக்கூடியதாக இருந்தன.
கே.சுந்தரலிங்கம்