அம்மை நோயா? சாமியா? எது நிஜம் ?

0
232

அம்மை நோய் என்பது முற்றிலுமாக வைரஸ்களால் ஏற்படும் நோய் பாதிப்புதானே தவிர அந்நோய் சாமி என்பதெல்லாம் கிடையாது.

பெரியம்மை (Small Pox)குரங்கு அம்மை: அமெரிக்காவிற்கு புதிய சவால்! - vanakkamamerica.com

வேரிசெல்லா வைரஸ் என்ற கிருமி இந்நோயை பரப்புகிறது. எளிதில் தொற்றக்கூடியது, திடீரென காய்ச்சல் அடிக்கும்;காய்ச்சலுடன் மூக்கிலிருந்து நீர் வடிதல், தும்மல், கை, கால் மூட்டு வலி; வாந்தி, கண்கள் சிவந்திருத்தல், போன்றவை இதன் அறிகுறிகள்.

சின்னம்மை (Chicken Pox)

வேரிசெல்லா ஜூஸ்டர் எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுவது. பெரியம்மையைப் போலவே இதுவும் தொற்றி, பரவக் கூடியது;இந்நோயானது விளையாட்டு பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு வருவதால் இதை விளையாட் டம்மை என்றும் அழைப்பார்கள்.சின்னம்மை ஏற்பட காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

தட்டம்மை (மணல்வாரி – Measles)

மீஸல்ஸ், ரூபெலா வைரஸ் அல்லது ஆர்.என்.ஏ. வைரஸ் கிருமியால் வருவது. அதிவேகமாகப் பரவக்கூடியது,தொற்றக்கூடியது; மூக்கிலிருந்து சீழ் வடிதல், தும்மல், இருமல்,கண்கள் சிவந்திருத்தல், கண் எரிச்சல் உண்டாகி காய்ச்சல் வந்து,செம்மண் நிறத்தில் சிறு சிறு பருக்கள் காதின் பின்புறம், கழுத்தின் பக்கவாட்டுப் பகுதி, முகத்திலும் தோன்றி, பின் உடல் முழுவதும் பரவக்கூடியது.அம்மை நோய் பாதிப்பு 300 சதவிகிதம் அதிகரிப்பு!' - எச்சரிக்கும் உலக சுகாதார  நிறுவனம் | measles ratio increses in worldwide

பொன்னுக்கு வீங்கி

பாராமிக்ஸோ வைரஸ் கிருமியால் உண்டாகக் கூடியது. தாடையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள பரோடிட் கிளான்சில் தொற்று உண்டாகி வீக்கம் ஏற்பட்டு, வலி ஏற்படுத்தக்கூடிய நோய் இது. இந்நோயில் தாடையின் கீழ் வீங்குவதால், இதை பொன்னுக்கு வீங்கி என்பர்.

காலை எழுந்தவுடன் 200 மி.லி. குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும். இளநீர்,

தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம். காலை, இரவு இரு வேளை குளிக்கவும்.டைப்பாய்டு, அம்மை நோய்கள்,மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு தேவையான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here