கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுபோட்டி டிசம்பர் 26 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் புரட்டொப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பழைய மாணவர்கள் அணி, வெற்றி மகுடத்தை தனதாக்கியது.
பாடசாலை அதிபர் தலைமையில், அயரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டிலேயே இப்போட்டித்தொடர் நடைபெற்றது.