அயர்லாந்து சர்வதேச பட விழாவில் விருதுகளை அள்ளிய தமிழ் படம்!

0
28

தமிழ் படங்கள் தற்போது அதிகளவில் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்து வருவதுடன், விருதுகளையும் குவித்து வருகிறது. அந்தவகையில் அயர்லாந்தில் நடந்த சர்வதேச பட விழாவில் ‘உன் பார்வையில்’ என்ற தமிழ் படம் பங்கெடுத்து சிறந்த படம், சிறந்த இயக்குனர் என 2 விருதுகளை அள்ளியிருக்கிறது.

பார்வதி நாயர், கணேஷ் வெங்கட்ராமன், மாஸ்டர் மகேந்திரன், துளசி, நிழல்கள் ரவி, பாண்டி ரவி நடித்துள்ள இந்த படத்தை கபீர் லால் இயக்கியிருந்தார். இவர் ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்பட 130-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் ஆவார்.

இதுகுறித்து கபீர் லால் கூறுகையில், ”ஒளிப்பதிவாளராக இருந்த நான், இயக்குனர் அவதாரம் எடுத்தது பெருமை தருகிறது. அந்தவகையில் எனது முதல் படமே சர்வதேச விருதுகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ஒரு திரில்லர் படத்தை இயக்க போகிறேன். இது முழுக்க முழுக்க காருக்குள் நடக்கும் கதை. இதற்கான படப்பிடிப்பு விரைவில் அபுதாபியில் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மலையாளத்திலும் படங்கள் இயக்கவுள்ளேன்”, என்றார்.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here