அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கவுள்ள செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவில் செஞ்சி மஸ்தான் அமைச்சரால் அமோக வரவேற்பு

0
179

இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் (11) நாளையும் (12), நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலண்டன், கனடா, மொரிசியஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா சென்றடைந்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இந்நிலையில், “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here