தற்போதைய நிர்வாகத்தின் உண்மை முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவதற்கு முன்பு கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
” ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பு எங்களிடம் கூறியது இதுதான். அதைப் பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிடுமாறு அவர் என்னிடம் கூறினார்,”
“நான் எப்போதும் தேசத்திற்காக உழைத்தேன். எனக்கு தனிப்பட்ட ஆதாயம் கிடைக்கவில்லை. தற்போதைய நிர்வாகத்தின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது,” என அவர் கூறியிருந்தார் என அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.