” அரசாங்கம் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு ஆதரவளிக்கப்படும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் முடிவடைந்த பின்பு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் அவ்வாற கூறினார்.
எதிரணிகளின் ஒன்றிணைவு பற்றி எழுப்பட்ட கேள்விக்கு, அது நல்லதுதானே என ராதாகிருஷ்ணன் எம்.பி. பதிலளித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு எப்படி என்ற கேள்விக்கு, நல்லது, அரசங்கம் நல்ல வேலைகளை செய்தால் ஆதரவளிப்போம். தவறான விடயங்களை செய்தால் அவற்றை எதிர்ப்போம்.” என்று இராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.