அரசாங்கத்தின் திட்டமற்ற செயலினால் நாட்டுக்கே உரமூட்டுகின்ற விவசாயிகள் உரமின்றி தவிக்கின்றனர்.

0
224

அரசாங்கத்தின் திட்டமற்ற செயலினால் நாட்டுக்கே உரமூட்டுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள், தொழிலின்றி வறுமை நிலையில் உள்ள தொழிலாளர் குடும்பங்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என சுமார் 2500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஸ்ணன் அவர்களின் நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றனர்.

அக்கரபத்தனை பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல் திட்டம் இன்று (27) புஸ்பா விஸ்வநாதன் தலையமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

கப்பல் எரிந்ததன் காரணமாக இன்று மீனவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இரசாயன உரம் தடை செய்யப்பட்டதன் காரணமாக விவசாயிகள் இன்று பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இவர்கள் இன்று உரம் இல்லாததன் காரணமாக விவசாய பாதிக்கப்பட்டு அவர்களின் முழு குடும்பமும் நடுதெருவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களை பொறுத்த வரையில் இரசயன உரம் இல்லாததன் காரணமாக இன்று தேயிலை கொழுந்து குறைவடைந்துள்ளது இரசயன உரம் இடும் போதே தோட்ட நிர்வாகம் 20 கிலோ பறிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருகிறது இந்த 20 கிலோ வே பறிக்க முடியாமல் தினறி வரும் நிலையில் இயற்கை பசளையோ அல்லது இராசயன உரமோ இன்றி எவ்வாறு இவர்கள் 20 கிலோ தேயிலை கொழுந்து பறிப்பது ஆயிரம் ரூபா சம்பளம் எப்படி பெறுவது என திண்டாடி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மேலும் சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள் உரமில்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டால் விவசாய பொருட்கள் உணவு பொருட்கள் ஆகியன இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் அப்போது அந்த பொருட்களில் எந்த அளவு இரசயன உரம் நச்சுப்பொருட்கள் உள்ளன என்பது எவருக்கும் தெரியாது எனவே மேலும் மேலும் எமது மக்கள் பாதிக்கக்கூடிய நிலையே காணப்படுகின்றது.

எனவே அரசாங்கம் செயற்கை பசளை பயன்படுத்தி விவசாயம் முன்னெடுப்பதனை நாங்கள் வரவேட்கிறோம் அதற்கு முறையான பயிற்சிகள் ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்காது எவ்வித திட்டமும் இல்லாமல் மிகவும் அவசரமாக இதனை முன்னெடுத்தன் காரணமாகவே விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசாங்கம் கட்ட கட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நாடு பெரும் பாதாளத்திற்குள் சென்று விடும். இன்று கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலையகத்தில் பல்வேறு தொழில் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன கொழும்பில் வேலை செய்து குடுபங்களை கவனித்து வந்த மலையக இளைஞர்கள் இன்று தொழிலின்றி பெரும் அவதிப்படும் நிலையில் அவர்களுக்கான நிவாரணங்களோ பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களோ முறையாக சென்றடையாத நிலையில் விவசாயத்துறையினருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைககளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here